இலங்கை
Typography

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய வேண்டும். அமைச்சுப் பதவிகளைப் பெற்று, வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.” என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்க் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு, எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால், மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா? இல்லை.

அதேபோல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகிப்பதால், முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிடுத்து, வடக்கு- கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும்.

கடந்த 50 வருடங்களில், வடக்குப் பகுதியில் பெரிதாக எவ்விதத் தொழிற்சாலையும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. காலைநிலை மாற்றத்தால், இன்னும் 40ஆண்டுகளில் வடக்குப் பகுதி அரைப் பாலைவனமாக மாறக்கூடும். அதைச் சமாளிப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்