இலங்கை
Typography

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை பின்வாங்காது என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை கூடிய அரசியலமைப்புப் பேரவையில் உரையாற்றிய போதே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சியாக கூட்டமைப்பு இருக்கின்றது. இந்நாட்டின் அரசியலமைப்பு, அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில், எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம். இரண்டுப் பிரதான தரப்புகளும், இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பொன்னான தருணத்தை இழந்துவிடக் கூடாது. இதேவேளை, குறித்த அறிக்கைகள், மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்