இலங்கை
Typography

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும். அனைத்து தலைவர்களும் பல தடவைகள் இதனைக் கூறியுள்ளனர். அதன்படி இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை. ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதேநேரம் அரச பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்