இலங்கை
Typography

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடிதமொன்றை எழுதியுள்ளார். 

2015 ஜனவரி 8ஆம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிக்கா தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, “இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச் சேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவை நான் ஆதரிக்கவில்லை.

2005 முதல் 2015 முதல் இந்த நாட்டில் காணப்பட்ட இலஞ்சம் ஊழல் மற்றும் வன்முறைகளின் அளவை நான் இன்னமும் மறக்கவில்லை. ஜனவரி 2015யில் மிகதீவிரமாக இடம்பெற்ற தேர்தல் மோதலில் மக்கள் அந்த குழுவினரை நிராகரித்ததை நான் மறந்துவிடவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்