இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அரசாங்கம் வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி இது குறித்து ஆராய்ந்து வருகின்றார்.

இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கவேண்டாம் என அந்த வேளையில் ஐக்கிய நாடுகளிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசின்ஹ கேட்டுக்கொண்டதாகவும், எனினும் அந்தவேளை வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர இந்த ஆலோசனையை புறக்கணித்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்