இலங்கை

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடிதடி- குழப்ப நிலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, மாவை சேனாதிராஜா, சந்ரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தவிர ஏனையோர் பங்கேற்றதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் இதன் போது அறிவித்துள்ளார்.

தொடர்புபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இந்த அறிக்கையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேரின் பெயர்கள் அடங்குவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் நவம்பர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பநிலை தொடர்பாக இந்தக் குழு முழுமையாக ஆராய்ந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட பலரிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளது. பாராளுமன்ற ஒளிப்பதிவுகள் மற்றும் ஊடகங்களின் நெறிப்படுத்தப்படாத ஒளிப்படக்காட்சிகள் என்பனவும் ஆராயப்பட்டதாக குழு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்திய உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தினுள் தவறு நடந்தால் அது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது குறித்தும் சபாநாயகரே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கூடிய போது சபை நடுவில் திரண்டு ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதலும் நடத்தப்பட்டன. இதன் போது சில உறுப்பினர்கள் காயமடைந்ததோடு பாராளுமன்ற உடைமைகளும் சேதமாக்கப்பட்டன.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.