இலங்கை
Typography

“எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முன்னெடுத்த தமிழர் போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னெடுத்தார். அதன் மூன்றாவது கட்டத்தை தற்போது எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில கூறியுள்ளதாவது, “தமிழர்களின் பிரிவினைப் போராட்டத்தை முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் ஆரம்பித்தார். பின்னர் இரண்டாம் கட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தினார். அடுத்தகட்டத்தை இப்போது சுமந்திரன் முன்னெடுக்கின்றார்”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்