இலங்கை

“நாங்கள் ஒருமித்த பிரிபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குலேயே ஒரு தீர்வினை எதிர்பார்க்கிறோம். ஆகவே நியாயமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு கொண்டுவரப்படுகின்றபோது, நாங்கள் அதனை எமது மக்கள் முன் எடுத்து செல்லுவோம். எமது மக்கள் அத்தகைய தீர்வுடன் கூடிய ஒரு புதிய அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு தமது ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய இராஜ்ஜிய வெளிவிவகார பிரிவின் தெற்காசிய திணைக்களத்தின் தலைவரும், இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட்டுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனவரி மற்றும் ஆகஸ்ட் தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையை சுட்டிக்காட்டிய சம்பந்தன், அதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

மேலும் அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சட்ட விரோதமானதும் அரசியல் சாசனத்திற்கு முரணானதுமான செயற்பாடுகளை நாம் எப்போதும் அனுமதிக்கப்போவதில்லை. நாம் அவ்வாறு செயற்படுகின்றபோது எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது எனவும் கொள்கையின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுக்கின்றபோது, ஏனைய விடயங்களை குறித்து பெரிதாக கவனம் செலுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் விளக்கமளித்த எம்.ஏ.சுமந்திரன், 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மிக நீண்ட நடைமுறைகளும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக்கூறிய அதேவேளை, இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்களை குறித்து தமது மக்களிற்கும் கட்சியினருக்கும் தெளிவுபடுத்துவதில் அசமந்த போக்கினை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரபரவலாக்கம் நேர்மையாதொன்றாகவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையில் இருத்தல் அவசியம் எனவும் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இதனை முன்னெடுத்து செல்வதில் காணப்படும் உண்மையான பிரச்சினை அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் காணப்படும் அசமந்தபோக்கே ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கைகளில் அதிகாரங்கள் செல்லுகின்றவிடத்து ஊழல் மற்றும் வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும். இதன் காரணமாக ஒருசில அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுகிறார்கள் என தெரிவித்த இரா.சம்பந்தன், நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளினதும் இயன்றளவு ஒத்துழைப்புடன் ஒரு அரசியல் யாப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதனை சுட்டிக்காட்டியதுடன், நாங்கள் ஒருமித்த பிரிபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குலேயே ஒரு தீர்வினை எதிர்பார்க்கிறோம்.

ஆகவே நியாயமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதனை எமது மக்கள் முன் எடுத்து செல்லுவோம் எமது மக்கள் அத்தகைய தீர்வுடன் கூடிய ஒரு புதிய அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு தமது ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் கூறினார்.

அத்துடன் சர்வதேச சமூகத்தின் வகிபாகம் குறித்து கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்வது தவிர்க்க முடியாததொன்று என்றும் சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மனமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் குறித்த கலவரையறைக்குள் நிறைவேற்றபடுவதனை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து கருமங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.