இலங்கை
Typography

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமே முன்னாள் பிரதம நீதியரசரை எதிர்வரும் 07ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை முன்னாள் பிரதம நீதியரசர் அவமதித்ததாக குற்றம்சாட்டி சிரேஷ்ட பேராசிரியர்களான சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவாவடுகே சிறில் மற்றும் பேராசிரியர் டொன் பிரிசாந்த குணவர்தன ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதிகளான விஜித் மலல்கொட, முர்து பெர்னான்டோ மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய மூவரும் முன்னாள் பிரதம நீதியரசரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டனர்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி மருதானை சந்தியில் நடைபெற்ற கூட்டத்தின்போது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உயர்நீதிமன்றத்தை கண்டனம் செய்யும் வகையில் அவமதித்து கருத்து வெளியிட்டிருப்பதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

எனினும் சரத் என்.சில்வா தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, எவ்வித அழைப்பும் விடுக்கப்படாத நிலையிலேயே முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என். சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாக நீதிபதிகள் குழாமிடம் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்