இலங்கை
Typography

இலங்கை முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுப் பழமைவாய்ந்த இந்துக் கோயில்களை, புனித ஸ்தலங்களாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் இந்து விவகாரத்துறை அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு, நேற்றைய தினம் (புதன்கிழமை) விஜயம் செய்திருந்த அமைச்சர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், “திருக்கேதீஸ்வரத்துக்குச் சொந்தமான, ஆனாலும் இன்னும் வழங்கப்படாத காணிகள் அனைத்தையும், மக்களின் பாவனைக்கும் கோயிலின் பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்