இலங்கை
Typography

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் தரப்பினர்களுக்கிடையிலான விசேட பேச்சுவார்த்தையின்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கம் செலுத்தவேண்டிய கடன்களை முழுமையாக செலுத்தி மக்களுக்கு உச்சளவு நிவாரணங்களை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீரமானித்துள்ளது. இதற்கிணங்க அனைத்து கட்சிகளையும் தேசிய அரசாங்கத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேற்றப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்