இலங்கை

அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான ஜப்பானிய மற்றும் அவுஸ்ரேலியத் தூதுவர்களை நேற்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தபோதே அவர் இதனை எடுத்துக்கூறியுள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து செல்லும் பிரைஸ் ஹட்ச்ஸ்ன் நேற்று சம்பந்தனை சந்தித்துள்ளார். அதேபோல், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியமாவும் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்புகளில் சமகால அரசியல் விடயங்கள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் குறித்து தமது மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் அக்கறையின்றி செயற்படுவதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அதிகார பரவலாக்கம் நேர்மையானதாகவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையில் இருத்தல் அவசியம் எனவும் சம்பந்தன் கூறியதாக கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.