இலங்கை

கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவை கேட்டுக்கொண்டுள்ளது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி மரணஅச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் இராணுவ அதிகாரி பிரியங்க பெர்ணான்டோவிற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறே வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு உட்பட பிரிகேடியர் குறித்து பின்பற்றப்பட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிகேடியரிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் பிணையில்லாத பிடியாணை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ரவிநாத் ஆரியசிங்க இது சர்வதேச சட்டங்களிற்கு முரணானது என தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இராஜதந்திர முகவராக செயற்பட்டுவந்தவர் என்பதால் அவரிற்கு விடுபாட்டுமை உள்ளது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சின் செயலார் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை வெளியிட்டுள்ள இந்த கரிசனைகள் குறித்து பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதாக இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.