இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள அநீதியான விமர்சனங்களால் மனமுடைந்துபோயுள்ளதாகவும், உற்சாகமிழந்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி சில நாட்களிற்கு முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து, அவரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிக உடகம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தீபிக உடகம, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கண்காணிப்பதும் உரிமைகளை உறுதி செய்வதும் மனித உரிமை ஆணையகத்தின் பணிகளில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

கைதிகள் உரிமைகள் மற்றும் அவர்களிற்கான தண்டனைகள் குறித்து மனித உரிமை ஆணையம் தகவல்களை முன்வைப்பதை குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதாக அர்த்தப்படுத்துவது தவறானது என்றும் கலாநிதி தீபிக உடகம குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும், அவர்களது குடும்பத்தவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ஆணைக்குழு விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியது அவர் அதற்கு பதில் அளித்துள்ளார் என்று தீபிக உடகம சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, “மாலியில் உள்ள இலங்கையின் அமைதிகாக்கும் படையினரை மீள அழைப்பது மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கைகளால் தாமதமானது என ஜனாதிபதி தெரிவித்திருப்பது தவறானது. மாலியில் இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீது பழியை போடுவது கடும் கரிசனத்தையும் வேதனையும் அளித்துள்ளது. எங்களது சுதந்திர தன்மை காரணமாகவும் எங்கள் மீதான நம்பிக்கை காரணமாகவும் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெறும் படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஐ.நா. எங்களிடம் வழங்கியது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.