இலங்கை

பொதுமக்களின் காணிகளை இராணுவம் உள்ளிட்ட படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்திருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கேப்பாப்புலவில் 709வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை (இன்று சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “709 நாட்களாக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்கள், இந்த இடத்தில் இருந்து படையினர் களையவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுகின்றது.

இது விடயமாக வடக்கு மாகாண ஆளுநருடன் ஒரு கிழைமைக்கு முன்னர் பேசினோம். இந்த விடயம் குறித்து அவர் மத்தியஸ்தம் செய்வதாகவும் இராணுவத்தினருக்கு இன்னும் ஆறுமாத கால தவணை வேண்டும் என்றும் கேட்டார்.

அதற்கு, முன்னரும் தவணை கேட்டிருந்தார்கள். தவணையில் விடயமில்லை படையினர் முகாமினை விட்டு வெளியேற தொடங்குங்கள், அதன்பின்னர் காலம் தல்லாம் என்று நான் கூறினேன்.

தவணை கேட்டுக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளதுடன், முதலில் படையினர் காணிகளை விட்டு போவதாக அறிக்கை தந்து முதலில் இரண்டு மூன்று லொறிகளில் ஏற்றுங்கள் அதற்கு பிறகு காலஅவகாசம் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளேன் இது பற்றி அவர்களுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கேப்பாபுலவு மண்ணில் இருந்து படையினர் வெளியேறாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இங்கு இருக்கும் மக்களுக்கு அதற்குரிய உறுதி இல்லை என்று சொல்கின்றார்கள்.

இரண்டாவது போரின்போது இந்த இடங்களை படையினர் கைப்பற்றி இருப்பதால் அவர்களுக்கு தொடர்ந்து இருக்க உரித்து இருக்கின்றது என்று கூறியுள்ளார்கள் இவைகள் எல்லாம் சட்டடிப்படி செல்லுபடியாகாத கருத்துகள்.

படையினர் போரின் போது பலாத்காரமாக எடுத்த காணிகளை, அவர்களிடம் திருப்பி கொடுக்கவேண்டியது படையினரின் கடமை. மக்களிடம் உறுதி இல்லை என்று சொல்வதற்கு படையினருக்கு உரித்து இல்லை.

இந்தக் காணியை வடக்கு மாகாண காணி ஆணையாளரிடம் காணியை கொடுத்து யாருக்கு அந்த காணிபோக வேண்டுமோ அவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லவேண்டுமே ஒழிய, உறுதி இல்லை என்று செல்லி போகாமல் இருப்பதற்கு உரித்து இல்லை.

மற்றையது, போரின்போது இந்த காணிகளை எடுத்தபடியாக அவர்களுக்கு தொடர்ந்து இருக்கலாம் என்ற கருத்தை படையினர் வெளியிட்டுள்ளார்கள். வேறு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு இந்த மக்கள் வரவில்லை. போரின்போது அரசாங்கத்தின் அதிகாரம் வடக்கில் இருந்தது அரசாங்கம் இருக்கும்போதுதான் போர் நடந்தது இன்னொரு நாட்டுக்கு சொன்று காணியை எடுத்ததைபோன்று, படையினர் காணியை எடுத்துக்கொள்வதற்கு சட்டத்தில் எந்தவிதமான உரிமையும் இல்லை. அது சட்டத்துக்கு பொருத்தமல்லாத கருத்து.

மூன்றாவதாக ஒரு கருத்தையும் வைத்துள்ளார்கள், கேப்பாப்புலவு மண் கேந்திரஸ்தானம். அதனால் இந்த இடத்தை விட்டு போகமுடியாது என்று சொல்கின்றார்கள். உண்மையில் மக்களின் காணிகளில் மரங்கள் வளங்களை பார்த்தால் அவர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள். கேந்திரஸ்தானம் என்றால், அதற்க காரணம் காட்ட வேண்டும். போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. கேந்திரஸ்தானத்துக்குரிய காரணங்கள் எங்களுக்கு எடுத்து காட்டவேண்டும். அது நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :