இலங்கை

“புதிய அரசியலமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்தோடு கொண்டு வரப்பட வேண்டும். கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயார். ஆனால் அதற்கான முயற்சி தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் நான் அதில் முழுமையாக ஈடுபடுவுள்ளேன்.

எனது நம்பிக்கை வழிநடத்தல் குழுவின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், இடைக்கால அறிக்கை வெளிவரவேண்டும் என்பதே எதிர்பார்பாகும்.

புதிய அரசியலமைப்பு உரிய தருணத்தில் வரும் என்று தாம் நம்புவதாகவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கருத்துகளை வைத்து கணிப்புக்களை மேற்கொள்ள முடியாது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதைவிட மும்முரமாக இந்த வேலைகள் நடைபெறக்கூடும். கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.

ஒக்டோபர் சதிப் புரட்சிக் காலத்தைப் பார்த்தால், மீண்டும் அரசு மாற்றப்படும் என்று எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, ஆனால், அது மாற்றப்பட்டமை நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.

புதிய அரசியலமைப்பை இந்த பாராளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உள்ளது. தற்செயலாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றலாம்.”என்றுள்ளார்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.