இலங்கை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய முடியாவிடின், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சவால் விடும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாட்டில் அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு தனிநபர் கையில் குழுவிந்து காணப்படும் பொழுது அங்கு சர்வாதிகார ஆட்சியும், முறையற்ற அரசியலமைப்பு பயன்பாடுகளுமே இடம்பெறும். இதற்கு நாம் ஏனைய நாடுகளை ஒப்பிட தேவையில்லை. எமது நாட்டில் அரசியல் களத்தினையே ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.” என்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.