இலங்கை

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் தற்போதையை அரசாங்கம் செயற்பட்டாலும், அதில் அங்கம் வகிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துளியும் இல்லை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் விடுதலையென்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலைகளில் இருந்தன. அதனை நாங்கள் கதைத்தால் இனவாதமென்பர். நில அபகரிப்பு, அரசாங்கத்தால் மட்டும் செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன. கிழக்கில் மக்களை வழிநடத்தவேண்டுமானால் அது இளைஞர்களினாலேயே முடியும்.

அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பது. அடுத்ததாக தமிழ் மக்களின் இறையாண்மை, நிலங்களைப் பாதுகாத்தல் என, தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாக பார்க்கவேண்டும். இவ்விரண்டு விடயங்களிலும் இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும். அதற்காக ஆயுதமேந்தி சண்டையிடுங்கள் என்று சொல்லவில்லை. அவ்வாறான நிலையொன்று இனி ஏற்படப்போவதுமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிங்கள தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விடவும் தமிழர்கள் தரப்பில் இருந்தே அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிங்களத் தரப்பை விமர்சிப்பதை விடவும் தமிழர் தரப்பை விமர்சிக்கும் நிலையே தமிழர் தரப்பில் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்துடன், கூட்டமைப்பு சோரம்போயுள்ளதென யாராவது விரல் நீட்டமுடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். காணாமல்போனோர் பிரச்சினைக்காக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கவேண்டுமென நாங்கள் கோரிவருகின்றோம்.

கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரின் பேச்சுகளே, கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. எங்களுக்கு சுதந்திரமில்லை. அதனை எங்கள் மக்கள் சொல்லுகின்றபோது, அதற்கு மாறான கருத்துகளை தெரிவிக்கும்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சோரம் போகாமலே, இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் என்றடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம். தாங்கள் நினைத்திருந்தால் பல அமைச்சுகளை பெற்றிருக்கமுடியும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில், கூட்டமைப்பு ஒருபோதும் பங்காளியாக இருக்காது.”என்றுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.