இலங்கை
Typography

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் காணப்பட்ட தலைமைத்துவப் பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை’ என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயற்குழு தெரிவு கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமை பலமுடைய தகுதிபெற்றவர். அவர் போன்று ஒரு தலைவர் சமகாலத்தில் இல்லை. விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு தரப்பினர் தமது சுயசேவைக்காக பல்வேறு வன்முறை தாக்குதல்களை செய்தனர். குறிப்பாக பல்வேறு படுகொலைகளை செய்தனர்.

ஆனால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைமையின் கட்டளைக்கு அமைவானது என்று குற்றம்சாட்டினர். எனினும் அது அவர் செய்தார், இவர் செய்தார் எனக்கு தெரியாது என்று பிரபாகரன் தட்டிக்கழிக்கவில்லை. குற்றம் தொடர்பில் ஆராய்வதாகவே அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்