இலங்கை

அரச ஊடகங்களை மக்கள் சேவைக்கான ஊடகங்களாக மாற்றுவது குறித்து ஆராய்வதற்கான குழுவொன்று ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் நியமிக்கப்பட்டுள்ளது. 

ஊடகப் பாவனை மற்றும் அவற்றின் சுயாதீனத்தன்மை தொடர்பாக சமூகத்தில் தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஊடக நிபுணர்களின் கருத்தானது தனியார் ஊடகங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரச ஊடகங்களை உண்மையான மக்கள் சேவைகள் ஊடக நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பதாகும். இந்நோக்கை முதன்மையாகக் கொண்டு ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் நேற்று திங்கட்கிழமை எழுவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கமைய அரச ஊடகத்துறை செயல்பாடுகளை ஆய்வுசெய்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதே இக்குழுவின் பொறுப்பாகும். இக்குழுவின் தலைவராக விஜயானந்த ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். குழு அங்கத்தவர்களாக பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, நாளக குணவர்தன, கௌசல்யா பெர்ணாந்து, அனோமா ராஜகருணா மற்றும் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.