இலங்கை

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை எமது கட்சி சவாலாகக் கருதவில்லை, காரணம் அவர்களின் தேர்தல் கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரன் மேலும் கூறியுள்ளதாவது, “விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், அனந்தி, சிவகரன் மற்றும் ஐங்கரநேசன் என தனித்தனியான அணிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்குள்ளேயே இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை, அனைவரும் ஒன்றாகினால் ஒருவேளை சவாலான அணியாக இருக்கலாம்.

எதனையும் மக்களே தீர்மானிப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்புக்களாக தெடர்ச்சியான பிளவுகள் தமிழர் தரப்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இது பெரும் குறைபாடாகும், இதனால் தென்னிலங்கை தரப்புக்களே இலாபமடையப் போகின்றன. கஜேந்திரகுமார் முதல் விக்னேஸ்வரன் வரையில் ஜனநாயகத்திற்காக கட்சிக்குள்ளிருந்தே போராடியிருக்க வேண்டும், தனித்தனியாக பிரிந்து செல்வதால் ஒருசிலர் தீர்மானம் எடுப்பதற்கே அது வழி சமைத்திருக்கின்றது.” என்றுள்ளார்.