இலங்கை
Typography

தென்னாபிரிக்கப் பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்துள்ளார். 

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக பிரதமர் இதனை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வாய்ப்பை வழங்கும் என பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், குறிப்பிட்ட நபர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது எனவும் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, அமைச்சரவை பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கால அவகாசத்தை கோரியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்