இலங்கை
Typography

“பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருக்கிறது. அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று அவசியம்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22வது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும். அந்த அரசாங்கத்தை பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்கக் கூடாது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அக்கட்சியின் தலைமைத்துவம் இயக்கவில்லை. பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருப்பதை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது.

நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதுடன், நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கும் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS