இலங்கை
Typography

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று- மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே அவ்வாயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அங்கு வந்துள்ள பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அகழ்வு இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்