இலங்கை
Typography

“ஒரு நாடு பொருளாதார ரீதியில் சுதந்திரமடையாவிடின், அரசியல் சுதந்திரத்தினை அடையமுடியாது. வடக்கு மாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை.” என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்படுகின்ற மக்கள் பணிகள் தொடர்பான ஊடக சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் 25 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கபெறுகின்றது. இதில் சுமார் நான்கு சதவீதமான வருமானத்தினை எமது மாகாணத்திற்கு எடுத்துகொள்ளுகின்றோம். இவ்வாறான நிலையினை உயர்த்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. எனவே இதற்கு அர்பணிப்புடன் அரச அதிகாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும்.

இதில் 96 வீதமான அபிவிருத்திக்கான நிதிகள் மத்திய அரசாங்கத்தின் இருந்து தான் கிடைக்கின்றன. இதில் 25 பில்லியனில் 15 பில்லினை கல்விக்காக முன்னேடுக்கின்றோம். அதில் மீளவருகின்ற செலவுக்காக திருப்பி திருப்பி செய்கின்றோம். இதில் கல்வி வளர்ச்சி, புதிய கட்டிடங்கள், ஆராட்ச்சிக்காக இவ் பெருந்தொகை நிதியினை எடுக்கின்றோம்.

இவற்றில் பாரிய பிரச்சனையாக சுகாதாரமாக இருக்கின்றது. இவற்றில் மேலதிகமாக வடக்கு மாகாணத்தில் 05 அமைச்சுகளுக்குரிய காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறைக்கான மூதலீடுகளை செய்யவேண்டும். புதிய விவசாய முறைகளை கண்டுபிடிக்கவேண்டும்” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS