இலங்கை
Typography

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும், இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்மவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கால அவகாசத்தில் உருப்படியாக அரசு எதையும் செய்யவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS