இலங்கை

நாட்டின் அரசியலமைப்பையும், அரசியலமைப்புப் பேரவையையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும், நீதித்துறை உட்பட நியமனங்கள் பலவற்றில் தனது அதிகாரத்தையும் மீறி அவர் செயற்பட்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி, பிரதமர் தலைப்பிலான 25 நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான தலைவர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புப் பேரவையை மீறி செயற்பட்டுள்ளார். ஜனாதிபதி அரசியலமைப்பையும் அரசியலமைப்புப் பேரவையையும் உதாசீனம் செய்து செயற்படுகிறார். பல தடவைகளில் அவரது பல்வேறு தலையீடுகள் மூலம் இது இடம்பெற்றுள்ளன. சுமார் ஆறு தடவைகள் அரசியலமைப்பை மீறி செயற்படும் ஜனாதிபதியிடம் அவருக்கான பொறுப்பு தொடர்பாக எவ்வாறு நம்பிக்கைகொள்ள முடியும்?

நாட்டின் முதன்மையான சட்டவாக்கம் அரசியலமைப்பே. அதனை மீறிசெயற்படுவது எவ்வாறு என்றும் சகல நியதிகளையும் அலட்சியம் செய்து பல அமைச்சர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்களையும் அவர் நியமித்துள்ளார்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :