இலங்கை
Typography

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்து மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளது. 

இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனீவா செல்லவுள்ள 3 பேர் அடங்கிய குழுவில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனையும் ஜனாதிபதி இணைத்துள்ளார்.

இந்நிலையில் தாம் ஜெனீவாவில் தமிழ் மக்கள் சார்பில் எதையாவது பேசவேண்டுமானால், அதனை தனக்கு நேரடியாகவோ, எழுத்துமூலமாகவோ சமர்ப்பிக்கும்படி ஆளுநர் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றிணை வெளியிட்டிருந்தார்கள்.

இதற்கமைய ஆளுநரின் பொதுமக்கள் தினமான நேற்று புதன்கிழமை கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 8 பேர் உள்ளடங்கிய குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றிணை கையளித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்