இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும் போது மட்டுமே அரசாங்கம் வடக்கு குறித்து பேசுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “கடந்த 4 வருட காலத்தில் அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 10,000 தொழில் வாய்ப்பு, சிறிய கார், பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு, நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுதல் என வழங்கப்பட்ட வாக்குறுகளில் எதுவும் நிறைவேறவில்லை.

20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட வயதினருக்கிடையிலான வேலையின்மை 16 வீதம் உயர்ந்துள்ளது. 60,000 பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின்றியுள்ளனர். இவர்களுக்கு கண்ணீர்ப்புகையும் தடியடியும் தான் தீர்வாக வழங்கப்படுகிறது. 22 மில்லியன் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.

இளைஞர் சேவைகள் மன்றம் சிறிகொத்த அலுவலகமாக மாறியுள்ளது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் செயற்படுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும் போது மட்டுமே அரசாங்கம் வடக்கு குறித்து பேசுகிறது.

வடக்கில் ஒரு கைத்தொழில்சாலையையோ பிரதான வீதியையோ வேறு அபிவிருத்தியையோ இந்த அரசாங்கம் செய்துள்ளதா? மதுபான தொழிற்சாலை மாத்திரம் தான் உருவாக்கியது. மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கம் இன்னும் இன்னும் கடன்களை அள்ளி வழங்குகிறது. கடந்த 4 வருட காலத்தில் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. எஞ்சிய சில மாதங்களிலாவது மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.