இலங்கை
Typography

“நாட்டில் வெறுப்பு பேச்சைத் தடை செய்யக் கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைதளங்களூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன.” என்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இலங்கை, மாலைதீவுக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், அமைச்சர் ஹக்கீமை உயர் கல்வி அமைச்சில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியலமைப்பு தொடர்பிலான இன்றைய நிலைமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சட்டமும் ஓழுங்கும் பேணப்படுவதன் அவசியம்போன்றவற்றை மையப்படுத்தி தூதுவர்அமைச்சரிடமிருந்து விளக்கங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்