இலங்கை
Typography

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோட்டாபய ராஜபக்ஷவைத் தவிர்த்து இன்னொருவரை ஜனாதிபதியாக்கும் எண்ணத்தினை ராஜபக்ஷ குடும்பம் கொண்டிருக்கவில்லை என்றும், அதற்கு பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களும் இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை துறக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். அடுத்த சில வாரங்களில் அவர் அமெரிக்காவுக்குச் சென்று, குடியுரிமையைத் துறக்கும் அடுத்த கட்டப் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளார்.

இதனிடையே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், பொதுஜன பெரமுனவினரும் கிட்டத்தட்ட நிராகரித்துள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான விரும்பத்தினை அவர் வெளியிட்டுள்ளதாகவும் தெரிகின்றது. எனினும், மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதவியைக் குறிவைத்துள்ளதால், அதற்கான வாய்ப்புக்களும் தற்போதைக்கு இல்லை. இதனால், தனி வழி செல்வது குறித்தே மைத்திரிபால சிறிசேன சிந்திக்க தலைப்பட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்