இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சுக்கள் முன்னேற்றமான கட்டங்களை அடையாத நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு பற்றிய பேச்சுக்களை பொதுஜன பெரமுன தவிர்த்து வருகின்றது.

குறிப்பாக, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் தயாராக இல்லை. அவர்கள், கோட்டாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள்.

அண்மையில் அமெரிக்கா சென்ற கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளார். குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை தங்கு தடையின்றி நடைபெற்றால், இன்னும் ஒரு சில மாதங்களில் பூர்த்தியாகும்.

இந்த நிலையில், தன்னை வேட்பாளராக ஏற்க வைக்கும் திட்டத்தின் போக்கிலேயே உடனடியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு மைத்திரிபால சிறிசேன செல்ல நினைக்கிறார். உடனடியாகக் தேர்தலை அறிவித்தால், அதில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட முடியாது போகும். அப்போது, பொதுஜன பெரமுனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தன்னை வேட்பாளராக ஆதரிக்கும் சூழல் உருவாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன கருதுகிறார். அதன்போக்கிலேயே அவர் அடுத்து வரும் நாட்களில் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்