இலங்கை

இனம் அல்லது மதத்தின் பெயரில் செயற்படும் அரசியல் கட்சிகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என தனித்தனி அமைச்சுக்களை அமைத்துள்ளதை விடுத்து, முன்பிருந்தது போல் அனைத்து சமயங்களுக்கும் ஒரே அமைச்சை அமைக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதேச மட்டத் தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களது கையாட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உயிர்த்த ஞாயிறு பண்டிகை தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், அறிவுபூர்வமான மக்கள் என்ற வகையில் பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர சட்டத்தைக் கையிலெடுத்து செயற்படுவது நல்லதல்ல.” என்றுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.