இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஏற்பட்ட நிலைமை இன்னும் மோசமாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது. 

அத்தோடு, அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தலையீடு, குறுக்கீடுகள் மற்றும் எந்தவொரு நபரையும் வேறுபடுத்தி பார்க்காமல் சகல பிரஜைகளினதும் உரிமை மற்றும் மரியாதையை பாதுகாக்கும் விதத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.

தற்போதைய சூழலில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும், இதற்காக அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்