இலங்கை
Typography

இலங்கையிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 

அத்தோடு, முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தியாகி ருவன்பத்திரனவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குரோதம், வெறுப்புணர்வு, அச்சம், வன்முகைளை தூண்டுபவர்கள் சமூகங்களிற்கு இடையில் மோதல்களை உருவாக்குபவர்களிற்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும். இலங்கை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கும்போது மனித உரிமையை மனதில் கொண்டு செயற்படவேண்டும். முன்னைய தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை தடுத்துவைத்திருக்கும் போதும் மனித உரிமைகளை கருத்தில்கொள்ளவேண்டும். சர்வதேச அளவில் விசாரணைகளின் போது பயன்படுத்தப்படும் நடைமுறைகளை பின்பற்ற வுண்டும்.

2018 மார்ச் மாதம் முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் இந்த தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் அச்சமூட்டுகின்றன. இந்த தாக்குதல்கள் தீடிரென இடம்பெறவில்லை. முஸ்லீம்களிற்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன. ஆபத்துக்கள் குறித்து முன்கூட்டியே வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இதன் மூலம் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளை தடுத்திருக்கலாம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்