இலங்கை

“பிரதமர் பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலமே இலங்கையில் பயங்கரவாதம் தோன்றியது. அது தெற்கில் இருந்து முதலில் வந்தது.” என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“அது பின்னர் ஆயுத செயற்பாடுகள் பயங்கரவாத இயக்கங்களாக அறியப்பட்டு, சிங்கள பயங்கரவாதம் என்ற பெயரில் தெற்கில் சொல்லப்பட்டு, பின்னர் தமிழ் பயங்கரவாதம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் சொல்லப்பட்டு, இன்று ஐஎஸ் என்ற சர்வதேச தொடர்புடன் இஸ்லாமிய பயங்கரவாதமாக சொல்லப்பட்டு வருகின்றது. ஆகவே இன்று பயங்கரவாதம் என்பதற்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய அடைமொழிகள் இந்நாட்டில் இருக்கின்றன. இவற்றுடன் கூடவே இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று எமது அமைச்சர் ஒருவர், இந்நாடு சிங்கள பெளத்த நாடு அல்ல என கூறியுள்ளதை அடிப்படையாக கொண்டு நாடு முழுக்க பெரும் வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கே எனக்கு முன் உரையாடிய தேரர் அவர்களும் இதுபற்றி பேசினார். என்னை கேட்டால், சட்டப்படி இது பெளத்த நாடுதானே என்பேன். ஏனென்றால் அப்படித்தானே, இந்த நாட்டின் அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது? நாம் அரைக்குறையாக முடித்து வைத்துள்ள, புதிய அரசியலமைப்பு வரைபிலும்கூட இதை நாம் பெரும் வாத விவாதத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதை இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் சுமந்திரன் அறிவார் என நான் நம்புகிறேன்.

நாம் அனைவரும் இந்நாடு இலங்கைதான். ஆகவே நாம் அனைவரும் இலங்கையர்தான். ஆனால், ஏன் நம்மில் ஒரு பிரிவினர் இலங்கையர் என்று கூறுவதைவிட, தம்மை சிங்கள பெளத்தர் என்று வரையறை படுத்தி அழைக்க விரும்புகின்றனர் என யோசிக்க வேண்டும். அவர்களுக்கு சிங்கள பெளத்தர் என்ற காரணத்தால் விசேட பிரச்சினைகள் உள்ளன. அவற்றினால், பல சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் இருக்கின்றன. அவற்றுக்கு விடை காணும் வரை, இந்த சிங்கள பெளத்த வரையறை இருக்கத்தான் செய்யும்.

அதேபோல் இந்நாட்டில் தமிழர்களுக்கும், தமிழர் என்ற காரணத்தால் விசேட பிரச்சினைகள் உள்ளன. பல சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் உள்ளன. இதுபோலவே மத அடிப்படைகளில் இந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் விசேட பிரச்சினைகளும், சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் உள்ளன.

ஆகவே, இந்த அனைத்து சந்தேகங்களுக்கும், பயங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை காண வேண்டும். ஒருவரை ஒருவர் அறிய வேண்டும். அதுவரை, இந்நாட்டில் நாம் இலங்கையர் என்பது கனவாகவே இருக்கிறது. நமது அண்டை நாடான இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல இனங்கள் வாழ்கின்றன. அவர்கள் மத்தியிலே சண்டை, சச்சரவுகள், பிரச்சினைகள் உண்டு. ஆனால், அவர்கள் தம் பிரச்சினைகளை கடந்து, “நாம் இந்தியர்” என ஒன்றுப்படுகிறார்கள். அந்நிலைமை இங்கே இல்லை. அதை இங்கே உருவாக்க வேண்டும்.

தேரர், தேசிய நல்லிணக்கம் பற்றியும் பேசினார். இந்நாட்டில் நல்லிணக்கம் இருக்கிறது. அது தோல்வியடையவில்லை. அது தோல்வியடைந்திருந்தால், ஏப்ரல் 21ஆம் திகதியே நாடு பற்றி எரிந்திருக்கும். அப்படி நடக்கவில்லை. ஆனால், 1977, 1983ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, கடை வீதிகள் பெருமளவில் எரிக்கப்பட்ட போது, நாட்டின் அரசாங்க தலைவர்களே கலவரங்களை தூண்டி விட்டபோது, தமிழர்களாகிய எங்களுக்கு சென்று முறையிட கூட ஒரு இடம் இந்நாட்டில் இருக்கவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. அதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று மக்கள் மனங்களில் கோபம் இருந்தாலும், அது அன்றைய காலகட்டம் போல் வெளிப்படவில்லை. எம்முன் இருப்பது ஒரு பயங்கரவாத பிரச்சினைதான் என்ற தெளிவு மக்களுக்கு இருக்கிறது. இப்போதுதான் தாமதித்து சில பிரச்சினைகள் அரசியல் தேவைகளுக்காக தூண்டிவிடப்படுகின்றன.

இங்கே உரையாற்றிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா பல நல்ல கருத்துகளை சொன்னார். அதன்போது முஸ்லிம் மக்கள் தொடர்பில் தாம் உள்ளகமாக விளக்கை அடித்து தமது இனத்துக்குள்ளே தேடிப்பார்க்க போவதாக சொன்னார். அது நல்லது. அதை அவர்கள் செய்யட்டும். அதேபோல் இங்கே பேசிய தேரர், நடந்து முடிந்து விட்ட பயங்கரவாத படுகொலைகள் தொடர்பில், ஜனாதிபதியும் கவலையை பகிர்ந்து கொள்கிறார். பிரதமரும் கவலையை பகிர்ந்து கொள்கிறார். அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கவலையை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படியானால் நாம் என்ன செய்வது எனக்கேட்டார். அவரது கேள்வி என் கன்னத்தில் அடித்தது போல் எனக்கு இருந்தது. பாதுகாப்பு தொடர்பில் எனக்கு நேரடி பொறுப்பு இல்லாவிட்டாலும் கூட, நானும் ஒரு அமைச்சர் என்ற முறையில் கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாகரீக மனோதிடம் எனக்கு இருக்கிறது.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :