இலங்கை
Typography

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மூவரும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோர் கடந்த 03ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்