இலங்கை
Typography

இறுதிப் போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தவும், அவர்களுக்கான நீதியைக் கோரவும் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். 

எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, எவ்வித அரசியல் நோக்கங்களும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அறிக்கையொன்றை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும், உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் நீதிக்காக குரல் கொடுப்பதற்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுவதற்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அனைவருக்கும் சட்டம் சமமானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் வகையில், உச்சபட்ச அதிகாரம் கொண்ட சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும். இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய, மிக அமைதியான முறையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலை நடத்துவது அவசியமாகவுள்ளது. கடந்த காலங்களைப் போல இம்முறையும் மாணவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரிமைகள் மற்றும் நீதி தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்