இலங்கை
Typography

வவுனியாவில் 817வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நேற்று வியாழக்கிழமை முள்ளிவாய்க்காலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும் அஞ்சலி நிகழ்வையும் முன்னெடுத்தனர். 

இந்த அடையாள உண்ணாவிரதத்திலும், அஞ்சலி நிகழ்விலும் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர். இதன் பின்னர் இந்த உறவுகளால் ஐ.நா. அதிகாரிக்கு அனுப்பி வைக்கவென ஒரு மகஜரும் ஊடகங்கள் முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டது .

அந்த மகஜர் வருமாறு ,

"அன்புள்ள செயலாளர்-ஜெனரல் அன்டோனியோ குவாட்ரஸ்

இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தமிழ் பெற்றோர்கள் நாங்கள் கீழே கையொப்பமிட்டுள்ளோம். இன்று தமிழர்களின் இலங்கை இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவு தமிழர்களின் நெஞ்சங்கள் வெடித்த நாள் . முள்ளிவாய்க்காலில் நாங்கள் இன்று உண்ணா விரதம் இருக்கிறோம். 145,000 மேற்படட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் இரக்கம் காட்டாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றிய உண்மையைச் சொல்லுவதில் ஸ்ரீலங்கா உறுதியாக இல்லை , காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இன்னும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக எப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களை கொலை செய்யும் அல்லது கொடுமைப்படுத்தும் ஒவ்வொரு சிங்கள குற்றவாளிகளுக்கும், ஸ்ரீலங்கா ஒருபோதும் தண்டித்ததில்லை தண்டிக்கப்போவதுமில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்க இலங்கைக்கு அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலன் தீர்மானத்துக்கு கூட இனி காத்திருக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் 145,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்களவர்களை தமிழர்கள் வெறுமனே நம்ப முடியாது. இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் அடிமை முகாம்களை இலங்கையில் நடாத்துகின்றது. ஸ்ரீலங்காவின் கொடூரமான பயங்கரவாத சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் இன்னும் பல தமிழர்கள் கடத்தப்பட்டு கொண்டேயுள்ளனர் .

ஆகையால், இப்போது ஒரு நல்ல நேரம் , சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) கொண்டு செல்வதற்கும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், காணாது ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும் இதை நீங்கள் செய்ய வேண்டிய நேரம் இது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்