இலங்கை

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நாட்டில் பல இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அணியினரே உள்ளனர். அவர்களின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் ராஜபக்ஷ அணியினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறியாகவுள்ளனர். இவர்கள் அரசியல் சூழ்ச்சி மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர். ஆனால், நாட்டின் நீதித்துறையும் சர்வதேச சமூகமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்தநிலையில், தாக்குதல்கள், வன்முறைகளைத் தூண்டிவிட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு வரச் செய்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க இவர்கள் முயல்கின்றனர். அதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் ஜனாதிபதி கைகட்டி வேடிக்கை பார்க்கின்றார்.

சந்தேகநபர்கள் என்று சிலரை மட்டும் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தால் போதாது. தாக்குதலின் பின்னனியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால், மைத்திரி ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரைக்கும் இந்த உண்மை வெளியில் வராது. ஏனெனில், இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதிலும் ராஜபக்ஷ அணியைக் காப்பாற்றுவதிலும் அவர் உறுதியாக உள்ளார். அதற்காகத்தான் சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை எனக்கு வழங்க ஜனாதிபதி பின்னடிக்கின்றார். அந்த அமைச்சு என் வசம் வந்தால் ராஜபக்ஷ அணியினரும், தானும் சிறைக்கு செல்ல நேரிடும் என்று அவர் அஞ்சுகின்றார்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“திருகோணமலை தமிழ் மக்களின் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்த ஊழல் மோசடிகளை விரைவில் வெளிப்படுத்துவேன்’ என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.