இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான மொஹமட் சஹ்ரான் ஹஸீம், தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளதாக மரபணுப் பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. 

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனைகள், அவர்களின் உறவினர்களுடன் ஒத்துப்போவதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என உறுதியாகியுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள தகவல்கள் உறுதி செய்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்