இலங்கை

“ஜனாதிபதி அல்லது பிரதமர் கோரினால் நான் உடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவேன். மற்றப்படி வேறு யார் கூறுவதையும் ஏற்றுச் செயற்பட மாட்டோன்.” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது அரசியல் வாழ்க்கையை இல்லாமலாக்க எதிர்க்கட்சி முயல்கின்றது. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் இராணுவத் தளபதிக்கு அழுத்தத்தை வழங்கவில்லை. கைதான ஒருவரின் விபரத்தையே அவரிடம் கேட்டேன். ஜனாதிபதி அல்லது பிரதமர் கூறினால் இப்போதே அமைச்சுப் பதவியிலிருந்து விலக நான் தயார்.” என்றுள்ளார்.