இலங்கை

நாட்டின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியே பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளரான ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததையடுத்து வண ஞானசார தேரருக்குத் தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணையொன்றின் பின்பே இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது.

உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்நாட்டின் பௌத்தர் அல்லாத பிரஜைகள்; மீதான வன்முறையைத் தூண்டிவிடும் தேரரின் நடவடிக்கைகள் மீது ஒரு போதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டதிற்குட்படுத்தப்பட்டு கையாளப்பட்டார்.

எல்லா பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலானது இனவெறி மற்றும் மதவெறியைக் கட்டுப்படுத்தி வைப்பதாகும். அரசாங்கமானது இச்சவாலைக் கருத்திற்கொண்டு எந்த இனத்தவர் மதத்தவராய் இருப்பினும் எல்லா கடும்போக்காளர்களையும் கடுமையாகக் கையாள வேண்டும். எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் ஒரேவிதமாக நடத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்

இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டிற்குத் தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது. அச்செய்தி யாதெனில், சிறுபான்மை மக்களிற்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது, ஆனால் பெரும்பான்மை மக்களிற்குச் சொற்ப அசௌகரியம் அளிக்கும் செயல்களோ மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்பதாகும்.

இது பேரினவாதத்தினை இன்னுமொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையாகும். ஜனாதிபதியின் இந்நடவடிக்கையைக் கண்டனம் செய்து இவ் ஆபத்தான போக்கினை மாற்றுவதற்கு நேர்வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்.” என்றுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.