இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கை மீது விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வெளிநாட்டு தூதுவர்களை நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்து பேசும்போது பிரதமர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“நாட்டின் நிலைமையை நாங்கள் சீர்படுத்தியுள்ளோம். பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். அதேசமயம் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தளர்த்துங்கள்”என்று வெளிநாட்டுத் தூதுவர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்