இலங்கை

“நாட்டுக்கு தீ வைத்து அழித்துவிட்டு அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டம் இடம்பெற்று வருகின்றது.” என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கண்டி குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “திரைப்படக் காட்சிகளை போன்றே இன்று இலங்கை அரசியலில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவை வெறும் நடிப்பு மாத்திரமே. இதனால் எவ்வித சேவைகளும் மக்களுக்கு இடம்பெற போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு எவரும் முன்னுரிமையளிப்பதில்லை. நாட்டை தீ வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் சூதாட்டமே நடைபெற்று வருகிறது.

83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று சில அரசியல் குழுக்கள் நாட்டுக்கு சேதங்களை விளைவித்தேனும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். எதிர்வரும் தேர்தல்களில் தெரிவாகும் ஜனாதிபதியும் பிரதமரும் யார் என்ற அரசியல் சூதாட்டம் அரங்கேற ஆரம்பித்துள்ளது. இது நாட்டுக்கு பெரும் பாதகமாகும்.” என்றுள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தியாகி திலீபனின் நினைவு தினமான 26ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.