இலங்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனை கூட்டத்திலேயே மேற்கண்ட விடயத்தை டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதி, பிரதமர் ,சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கிய டக்ளஸ் தேவானந்தா, தேவையற்ற கெடுபிடிகள் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணும் நிலைமை இருப்பதாக எடுத்துக்கூறியுள்ளார்.

“குடு மற்றும் கடு தான் இப்போது குடாநாட்டின் பிரச்சினை (குடு போதைப்பொருள், வாள் ) அங்கு தேவையற்ற கெடுபிடிகளை செய்யாதீர்கள்”என்று டக்ளஸ் தேவானந்தா கூறியதையடுத்து அது குறித்து கவனிக்குமாறு உடனடியாக இராணுவத் தளபதியை ஜனாதிபதி பணித்துள்ளார்.

இந்த கூட்டம் முடிந்த கையோடு இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல் யாழ்ப்பாண கட்டளைத் தளபதிக்கு சென்றது. இதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட யாழ். கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி, குடாநாட்டில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையினர் மக்கள் பாதிக்காத வகையில் செயற்படுவதாகவும், ஆனாலும் ஏதும் அனாவசிய செயற்பாடுகள் நடைபெறுமாயின் தமது கவனத்திற்கு கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.