இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தினத்தற்கு நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கைக்கு சீன நாட்டவர்கள் சுற்றுலாவுக்கென விஜயம் செய்வதில் சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. தற்பொழுது இலங்கைக்கான சுற்றுப் பயணத்தின் போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு மேம்பாட்டு நடவடிக்கையாகும் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கான சுற்றுலாப் பயணத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை வெளிநாடுகள் நீக்க வேண்டும் என்று இலங்கையில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்