இலங்கை
Typography

“அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிப்போம். அரசாங்கத்தை துரத்துவதற்கு நாங்கள் எப்போதுமே தயாராகவே இருக்கிறோம்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை கலைக்க யோசனை ஒன்றை கொண்டு வந்தால், அதற்கு ஆதரவாக வாக்களிக்கவும் நாம் தயாராக இருக்கிறோம். அரசாங்கத்திற்குள் காணப்படும் பிரச்சினைகளை மூடி மறைக்கவும், நாடும் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றை மறைக்கவும் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்