இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடியும்வரை அமைச்சு பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாயக்க தேரர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

ரவூப் ஹக்கீம் தலைமையிலான முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள், அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை நேற்று செவ்வாய்க்கிழமை சந்திந்தனர். இதன்போதே முன்னாள் அமைச்சர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் பதவிகளை ஏற்குமாறு தேரர்கள் து கேட்டுக் கொண்டனர்.

இங்கு பேசிய ரிசார்ட் பதியுதீன் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளார். அப்போது பதிலளித்துள்ள தேரர்மார் விசாரணைகள் இல்லாத இதர பிரமுகர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று செயற்பட கேட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதால் விசாரணைகள் முடிந்து நியாயமான ஒரு தீர்ப்பு கிடைக்கும்வரை எந்த பதவிகளையும் ஏற்கப்போவதில்லையென்று ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்துள்ளார்.