இலங்கை

‘என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ரணில் விக்ரமசிங்க கூறினால், நான் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் போட்டியிடமாட்டார். இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் கட்டாயம் களமிறங்குவார். வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரே முதலிடத்தில் உள்ளது.

அதேவேளை, கட்சியின் பிரதித் தலைவரான எனது பெயரும், சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்ற விபரத்தை கட்சியின் உயர்பீடம் வெளியிடும்.

எனக்குப் பதவி ஆசை இல்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதியான எனது தந்தை பிரேமதாச இந்த நாட்டுக்குச் செய்த சிறந்த சேவைகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதன் பிரகாரம் நானும் செயற்படுவேன்.” என்றுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ன் நாடாளுமன்றித்தின் முன்னதாக அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரத் தொடக்கத்தில் "மாற்றத்திற்கான எழுச்சி" இன் ஆர்வலர்கள் உருவாக்கிய "காலநிலை முகாம்" வெளியேற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று வெள்ளி மாலை ஹெல்வெட்டியா பிளாட்ஸில் கூடினர்.

ஒரு பயனுள்ள தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.